ஹோட்டலில் நடக்க இருந்த பயங்கரம்................................................
தம்பதியர் ஹோட்டலில் தங்கினர். இருவரும் சாவதற்கு தயாராகினர். அந்த ஹோட்டலில் ஒரு 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வேலை செய்துவந்தார். இருவருக்கும் தேவையான வசதிகளை அவர்தான் செய்து கொடுத்தார். "அய்யா எதாவது வேடும் என்றால் என்னை அழைக்கவும்". "சரி". என்ன பிரச்சனைக்கு இருவரும் சாகவேண்டும்?. தனது ஜவுளிக்கடையில் பெரிய நஷ்டம். கடன்கரர்களுக்கு சொத்துகளை விற்று கொடுத்தாட்சு பணம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்து இருவரும் மனமுடைந்து இந்த முடிவுக்கு வந்துவிட்டனர்.இருவரும் கவலையில் இருந்தனர். அந்த வேலை ஆள் மீண்டும் வந்து சாப்பிட வருமாறு கூறினர். இருவரும் கீழ இறங்கி வந்தனர். அந்த வேலையால் மிகவும் சுறுசுறுப்பாக வேலைசெய்து கொண்டிருந்தார். இருவரும் அவரை கவனித்து கொண்டே சாபிட்டனர். அருகில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரிடம் அந்த நபரை பற்றி கேட்டனர். இவர் வரும் அனைவரையும் நன்றாக பார்த்துக்கொள்கிறார் என்று கேட்டனர். இவரும் ஒரு காலத்தில் பணக்காரர் தான் பிள்ளைகளின் பொறுப்பற்ற தன்மையால் சொத்துகள் அனைத்தையும் இழந்து இன்று இங்கு வேலை செய்கிறார். ஆனால் அவர் மிகுந்த தன்னம்பிக்கை உடையவர் நான் திரும்பும் ஒருநாள் ஹோட்டல் வைப்பேன் என்று உறுதியுடன் உள்ளார். இவரின் நிலையில் யாராவது இருந்திருந்தால் தற்கொலைதான் செய்திருப்பார்கள். இவரின் ஹோட்டலில் வேலை செய்தர்வர்கள் தான் இன்று இங்கும் இவருடன் வேலை செய்கிறார்கள். "வாழ்க்கை என்றால் ஏற்ற தாழ்வுகள் சகஜம் அதில் வாழ்கையை ரசிபவந்தான் மனிதன்" என்று நினைத்து தம்பதியர் தங்களின் முடிவை மாற்றிகொண்டனர். "சார் டீ, காபி எதாவது" என்று அந்த தன்னம்பிக்கை மனிதரின் குரல்.
எப்பொழுதோ படித்த கதை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment