Wednesday, May 19, 2010

மாட்டுவண்டியில் கடத்தப்பட்ட மூட்டைகள்

மாட்டுவண்டியில் இருந்தது என்ன?             ..........................................................................................

    ஒரு சிறிய கிராமத்தில் பண்ணையில் இருவர் வேலைசெய்து வந்தனர். அதில் ஒருவர் பெயர் ராஜு கடின உழைப்பாளி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உழைப்பவர். மற்றொருவர் ராமு இவரும் அதே பண்ணையில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்பவர் ஆனால் ராமு ராஜுவைவிட அதிக கூலி பெறுபவர். ராஜு ஒரு நாள் முதலாளியிடம் கூலி வித்தியாசத்தை கேட்டான் அதற்கு முதலாளி தொலைவில்வரும் மாட்டுவண்டி எங்கிருந்து வருகிறது என்று கேட்டுவர  சொன்னார். ராஜுவும் வண்டிக்காரரிடம் விசாரித்து வந்தான். "வண்டி பாகத்து ஊரில் இருந்து வருகிறதாம்". "வண்டியில் என்ன கொண்டு செல்கிறார்கள்". மீண்டும் ஓடி போய் கேட்டுவிட்டு வந்தான் ராஜு. "வண்டியில் நிலகடலை செல்கிறது". "ஒ அப்படியா யார்வீட்டுக்கு  போகிறதாம்". ஓடி போய் கேட்டு விட்டு வந்தான். " அந்த வண்டி பக்கத்து ஊர் பண்ணையார் விட்டுக்கு செல்கிறதாம். அதே நேரம் ராமுவும் அங்கு வந்தான் அவனிடம் நீ  போய் அந்த மாட்டுவண்டியில் என்ன செல்கிறது என்று கேட்டு வா என்றார் முதலாளி. அவனும் விசாரித்து வந்தான். " என்ன பா மாட்டுவண்டியில் என்ன?". அய்யா அதில் நிலகடலை இருக்கிறது. பக்கத்துக்கு கிராமத்திலிருந்து அடுத்த ஊர் பண்ணையார் விட்டுக்கு செல்கிறது" என்றான். முதலாளி ராமுவை போக சொல்லிவிட்டு ராஜுவை பார்த்து "பார்த்தாயா இதுதான் ராமு, நான் கேட்ட ஒரு கேள்விக்கு அவன் முழுவிவரத்தையும் கொண்டுவந்தான் ஆனால் நீ எப்படி பார்த்தாயா!" என்று வித்தியாசத்தை எடுத்து காட்டினார்.

"திறமை இருந்தால் தான் மதிப்பு".

எப்பொழுதோ படித்த கதை.

Monday, May 17, 2010

ஹோட்டலில் நடக்க இருந்த பயங்கரம்!

ஹோட்டலில் நடக்க இருந்த பயங்கரம்................................................

         ம்பதியர் ஹோட்டலில் தங்கினர். இருவரும் சாவதற்கு தயாராகினர். அந்த ஹோட்டலில் ஒரு 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வேலை செய்துவந்தார். இருவருக்கும் தேவையான வசதிகளை அவர்தான் செய்து கொடுத்தார். "அய்யா எதாவது வேடும் என்றால் என்னை அழைக்கவும்". "சரி". என்ன பிரச்சனைக்கு  இருவரும் சாகவேண்டும்?. தனது ஜவுளிக்கடையில் பெரிய நஷ்டம். கடன்கரர்களுக்கு சொத்துகளை விற்று கொடுத்தாட்சு  பணம்  இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்து  இருவரும் மனமுடைந்து இந்த முடிவுக்கு வந்துவிட்டனர்.இருவரும் கவலையில் இருந்தனர். அந்த வேலை ஆள் மீண்டும் வந்து சாப்பிட வருமாறு கூறினர். இருவரும் கீழ இறங்கி வந்தனர். அந்த வேலையால் மிகவும் சுறுசுறுப்பாக வேலைசெய்து கொண்டிருந்தார். இருவரும் அவரை கவனித்து கொண்டே சாபிட்டனர். அருகில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரிடம் அந்த நபரை பற்றி கேட்டனர். இவர் வரும் அனைவரையும் நன்றாக பார்த்துக்கொள்கிறார் என்று கேட்டனர். இவரும் ஒரு காலத்தில் பணக்காரர் தான் பிள்ளைகளின் பொறுப்பற்ற தன்மையால் சொத்துகள் அனைத்தையும் இழந்து இன்று இங்கு வேலை செய்கிறார். ஆனால் அவர் மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்  நான் திரும்பும் ஒருநாள் ஹோட்டல் வைப்பேன் என்று உறுதியுடன் உள்ளார். இவரின் நிலையில் யாராவது இருந்திருந்தால் தற்கொலைதான்  செய்திருப்பார்கள். இவரின் ஹோட்டலில் வேலை செய்தர்வர்கள் தான் இன்று இங்கும் இவருடன் வேலை செய்கிறார்கள். "வாழ்க்கை என்றால் ஏற்ற தாழ்வுகள் சகஜம் அதில் வாழ்கையை ரசிபவந்தான் மனிதன்" என்று நினைத்து தம்பதியர் தங்களின் முடிவை மாற்றிகொண்டனர். "சார் டீ, காபி  எதாவது" என்று அந்த தன்னம்பிக்கை மனிதரின் குரல்.

எப்பொழுதோ படித்த கதை.

Sunday, May 16, 2010

தேவாலயத்தில் நடந்தது என்ன?


தேவாலயத்தில் நடந்தது என்ன? தேவாலயத்தில் ஒரு நாள்..............

   தேவாலயத்தில் ஒரு நாள் புதிய பாதர் வந்திருந்தார். அவருக்கு அனைவரும் படித்து இருக்க வேண்டும் என்று ஆசை பட்டார். தேவாலயத்தில் வேலை செய்யும் அனனவரையும் தனது அறைக்கு வரசொல்லி பரிசோதனை நடத்தினார். படிக்காத நபர்களை வெளியேற்றினர். அனனவரும் படித்து இருந்தனர் ஆனால் ஆலயத்தில் மணி அடிக்கும் ஒருவன் மட்டும் படித்திருகவில்லை அவனை மட்டும் வேலையை விட்டு அனுப்பினார். அவனும் எவ்வளவோ எடுத்து கூறியும் அதனை அவர் ஏற்க மறுத்து விட்டார். அவனும் வேலையை விட்டு வெளிய சென்றான். கவலையில் ஊர் ஊராக சுற்றிகொண்டிருந்த அவன், சிகிரட் வாங்க கடையை தேடினான்  அந்த பகுதியில்  கடைகள் இல்லை. அப்பொழுது அங்கிருக்கும் சிலர் கூறினர் சில  கிலோ மீட்டர் சென்றால் தான் சிகிரட்  கிடைக்கும் என்று. இதை அவன் சிந்தித்து நாமே ஏன் ஒரு கடை வைக்க கூடாது என்று. கடை வைத்தான் நல்ல லாபம் கிடைத்தது. சொந்தமாக ஒரு  சிகிரட் நிறுவனம் ஆரம்பித்து முன்னறினான். சிறிது காலம் கழித்து அவன் தேவாலயத்துக்கு சென்று பாதரை சந்தித்து நான் யாரென்று தெரிகிறதா என்று கேட்டான். அவருக்கு நினைவு இல்லை. நான் தான் மணியடித்து கொண்டிருந்தவன் என்று கூறினான். ஆம்மாம் நான் தான் உன்னை வேலையில் இருந்து வெளியேற்றினேன். மிகுந்த நன்மை செய்திர்கள் அய்யா. "ஏன் கஷ்டபடுகிறாயா!". "படித்திருந்தால் இந்த பிரச்னை இல்லை பார்த்தாயா". "நான் படித்திருந்தால் இன்னும் கோவிலில் மணி தான் அடிக்கணும்". ஆனால் இப்பொழுது நான் நல்ல நிலைமையில் இருக்கேன் என்றான். 

எப்பொழுதோ படித்த கதை.

Friday, May 14, 2010

மதுபான விடுதியில் சங்கரன் பிள்ளை,

மதுபான விடுதியில் சங்கரன் பிள்ளை,


    ங்கரன் பிள்ளை ஒரு நாள் மதுபான விடுதிக்கு சென்றார் அதிக அளவு மதுபானம் அருந்திவிட்டு தனது வாகனமான கழுதையை தேடி வெளியில் சென்று பார்த்தார் மிகவும் கோபகாரரான சங்கரன் பிள்ளை அதிர்ச்சி அடைந்தார். அங்க அவருடைய கழுதைக்கு யாரோ சாயம் பூசி வைத்து இருந்தார்கள். தங்க முடியாத கோபத்துடன் விடுதிக்குள் சென்று யார் என் கழுதைக்கு சாயம் பூசியது என்று கேட்டார். ஆறு அடியில் ஒரு கனவான் எழுந்து நின்றான். கோபத்துடன் வேகமாக அவனிடம்  சென்றார் அனைவரும் என்ன நடக்கும் என்று தெரியாமல் அச்சத்துடன் காத்துக்கொண்டிருந்தனர்  இருந்தனர்.சங்கரன் பிள்ளை அவனிடம் சென்று என் கழுதைக்கு மீதி சாயத்தையும் பூசிவிட்டால் நான் வேகமாக வீட்டுக்கு செல்வேன் என்றார்.

எப்பொழுதோ படித்த கதை.

Sunday, May 9, 2010

தினமும் ஒரு கதை,

வாழ்க்கை நெறி கதைகள்,


ஒரு காட்டில் ஒரு அழகான கள்ளி செடி அதனனை சுற்றி அழகிய சந்தன மர கூட்டம். காட்டிற்கு வரும் மனிதர்கள் அனைவரும் சந்தன மர கூட்டத்தை பார்கின்றனர் ஆனால் கள்ளி செடியை யாரும் கவனிப்பது இல்லை. இதை பார்த்த கள்ளி செடி கடவுளிடம் வரம் கேட்டது என்னை அனனவரும் ரசிக்கும் படி வாசனை நிறைந்த மரமாக மாற்றி விடும்படி வேண்டியது. கடவுளும் அவ்வாறாக மாற அருளினார். காட்டிற்கு வரும் அனைவரும் கள்ளி செடியை (சந்தனமரமாக மாறிய) உடைத்து எடுத்து செல்ல ஆரம்பித்தனர். வேதனை தாங்க முடியாத சந்தனமரமாக மாறிய கள்ளி செடி கடவுளிடம் மீண்டும் வரம் கேட்டது. என்னை அழகிய பளபளக்கும் கண்ணாடி செடியாக மாற்றி விடும்படி கடவுளிடம் வேண்டியது . கடவுளும் அவ்வாறாக மாற அருளினார். காற்று அடித்தல் கூட கல்,தூசி பட்டு செடி உடைந்து விடுகிறது. மீண்டும் கள்ளி செடி கடவுளிடம் அழகிய பசுமை நிறைந்த செடியாக மாற வேண்டியது. கடவுளும் அவ்வாறாக மாற அருளினார். காட்டிற்குவரும் வரும் விலங்குகள் அனைத்தும் உண்ண ஆரம்பித்தது. இந்த வேதனையும் தங்க முடியாமல் கள்ளி செடி கடவுளிடம் என்னை யாரும் தொடாத முள் செடியாக மாற்றிவிடும்படி கடவுளிடம் வேண்டியது. கடவுளும் மீண்டும் யாரும் தொடாத முள் நிறைந்த கள்ளி செடியாக மாற்றினார், கள்ளி செடி நிம்மதியாக இருந்தது. இந்த கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது கடவுள் நமக்கு தகுந்த இடத்தை தான் கொடுத்து இருக்கிறான் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.


எப்பொழுதோ படித்த கதை.