Sunday, May 9, 2010

தினமும் ஒரு கதை,

வாழ்க்கை நெறி கதைகள்,


ஒரு காட்டில் ஒரு அழகான கள்ளி செடி அதனனை சுற்றி அழகிய சந்தன மர கூட்டம். காட்டிற்கு வரும் மனிதர்கள் அனைவரும் சந்தன மர கூட்டத்தை பார்கின்றனர் ஆனால் கள்ளி செடியை யாரும் கவனிப்பது இல்லை. இதை பார்த்த கள்ளி செடி கடவுளிடம் வரம் கேட்டது என்னை அனனவரும் ரசிக்கும் படி வாசனை நிறைந்த மரமாக மாற்றி விடும்படி வேண்டியது. கடவுளும் அவ்வாறாக மாற அருளினார். காட்டிற்கு வரும் அனைவரும் கள்ளி செடியை (சந்தனமரமாக மாறிய) உடைத்து எடுத்து செல்ல ஆரம்பித்தனர். வேதனை தாங்க முடியாத சந்தனமரமாக மாறிய கள்ளி செடி கடவுளிடம் மீண்டும் வரம் கேட்டது. என்னை அழகிய பளபளக்கும் கண்ணாடி செடியாக மாற்றி விடும்படி கடவுளிடம் வேண்டியது . கடவுளும் அவ்வாறாக மாற அருளினார். காற்று அடித்தல் கூட கல்,தூசி பட்டு செடி உடைந்து விடுகிறது. மீண்டும் கள்ளி செடி கடவுளிடம் அழகிய பசுமை நிறைந்த செடியாக மாற வேண்டியது. கடவுளும் அவ்வாறாக மாற அருளினார். காட்டிற்குவரும் வரும் விலங்குகள் அனைத்தும் உண்ண ஆரம்பித்தது. இந்த வேதனையும் தங்க முடியாமல் கள்ளி செடி கடவுளிடம் என்னை யாரும் தொடாத முள் செடியாக மாற்றிவிடும்படி கடவுளிடம் வேண்டியது. கடவுளும் மீண்டும் யாரும் தொடாத முள் நிறைந்த கள்ளி செடியாக மாற்றினார், கள்ளி செடி நிம்மதியாக இருந்தது. இந்த கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது கடவுள் நமக்கு தகுந்த இடத்தை தான் கொடுத்து இருக்கிறான் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.


எப்பொழுதோ படித்த கதை.

No comments:

Post a Comment